Vikatan has published its survey results. I haven't actually read it in their site. I just got a mail with the survey results. I'm not sure about the genuineness of the mail. I just pasting the contents from the mail below.
நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் கைதாக வேண்டும்!
விகடன் சர்வே!
விடுதலைப் புலிகள், ராஜீவ் படுகொலை வழக்கு, கச்சத்தீவு, இலங்கை
பிரச்னையில் இந்திய அரசின் அணுகுமுறை ஆகிய அனைத்துக் கோணங்களிலும் 12 கேள்விகளுடன் விரிவானதொரு சர்வே நடத்தியது ஆனந்த விகடன் டீம்.
இணையதளத்தில் 2,130 பேர், சர்வே டீம் நேரடி விசிட்டில் தமிழகம் முழுவதும்
பதில் அளித்தவர்கள் 2,065 பேர். ஆக, மொத்தம் 4,195 பேர் ஆண்கள்-பெண்கள்,
நகர்ப்புறம்-கிராமப்புறம் என்று பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த
சர்வேயின் பிரமிப்பூட்டும் முடிவுகளை இங்கே தருகிறோம்.
'ஈழத் தமிழர் விவகாரத்தில் இங்கே நிலவும் மனநிலை இதுதான்!' என்று
அடித்துச் சொல்லும் சர்வே முடிவுகள் இவை!
ஜூலை 25, 1983..! இலங்கையில் இனவெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக
விழுந்த நாள். சிங்கள ராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில்வெறி பிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!
அரை நூற்றாண்டு காலமாக யுத்தத்தின் ரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, இலங்கை அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, 'தமிழீழ விடுதலைப்புலிகள்'!
சர்வதேசத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப்புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற இலங்கை ராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!
''ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை மீளச் செய்யும் நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளோம். புலி களைவீழ்த்த இன்னும் 10 ஆயிரம் வீரர்கள் உடனடி யாகத் தேவைப்படுகிறார்கள்!''என்றுஅறிவிக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில்போட்டியிடும் பாரக் ஒபாமா உலகின் மற்ற
தீவிரவாதஅமைப்புகளைக் கண்டிக்கிறார். ஆனால், புலிகள் பற்றிய
கேள்விகளுக்கு அவரது பதில் மௌனம்-தான். '
ஷெல்லடிக்கிற ராவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக்
கைபிடிச்சு இழுக்கிற ஆர்மிக்காரவுகளும் இல்லாத எங்கட மண் வேண்டும்' என ஏங்கிக்கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!
ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது, அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? ஆன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர்களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், ''விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரைஅவர்கள் இழப்புகளில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக் களத்தில் புலிகள் கண்ட இழப்புகள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக் குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது'' என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள ராணுவம்
முன்னேறி வருகிறது என இலங்கை அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா
கலந்துகொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கைதமிழர் பிரச்னை யில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழ் ஈழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?
''ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் துவக்கிய அமைப்பு,
இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்
புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின்
ராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு
நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது
சிங்கள ராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!'' என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன் நம்பிக்கையாக!
புலிகளின் நிரந்தர ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர்
பழ.நெடுமாறன், ''யுத்த தந்திரங்களின்படி சில இடங்களில் முன்னேறி, சில
இடங்களில் பின்வாங்கினாலும் புலிகள் தங்கள் இலக்கை நோக்கி
முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவி பெறும் சிங்கள ராணுவத்திடம் பறித்தெடுத்த ஆயுதங்களைக்கொண்டே இத்தனை காலமும் வளமான போராட்டம் நடத்தி வருகிறார்கள் புலிகள்!'' என்கிறார்.
''தமிழீழப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அறிவியல்பூர்வமாகவும் ராணுவரீதியாகவும் பெரும்வெற்றியைச் சந்தித்திருக்கிறது. சர்வதேச அளவில் தமிழீழம் அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, இலங்கையில் தமிழ் ஈழத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழீழத்துக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நீதி, காவல், கல்வி, மருத்துவம், நிதி என அனைத்துத் துறைகளும் சிறப்பாக இயங்கிவருகின்றன. இலங்கை சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை ஒட்டி, புலிகள் அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் புலிகளின் நேர்மையை உலகுக்குக் காட்டுவதாக இருக்கிறது!'' என்று பெருமிதப்படுகிறார் தொல்.திருமாவளவன்.
''ஏழு, எட்டு வயசுப் பசங்களை எல்லாம் தீவிரவாதிகளாக மாத்துறதுதான் ஒரு
இயக்கத்தின் கொள்கையா இருந்தா, அப்படி ஒரு இயக்கம் எதுக்கு?
தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கே இருந்துதான்
தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துறாங்க புலிகள். இதனால்
தமிழகத்துக்கு எப்பவும் பாதிப்புதான். இப்போ இலங்கைப் பிரச்னையில்
இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் சரி. தனி ஈழம் சரியான தீர்வு இல்லை'' என்று காரசாரமான விமர்சனத்தைப் புலிகள் மீது வைக்கிறார் சோ.
பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரனோ
''ஒவ்வொரு முறை சமரச உடன்படிக்கை ஏற்படும்போதும், இலங்கை அரசுதான் அதை மீறிச் செயல்பட்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குகிறோம் என்று அறிவித்துவிட்டு, ஒரே வாரத்தில் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில்தான் இலங்கை அரசு போடும். இதற்கு தனி ஈழம் அமைவது ஒன்றுதான் இறுதித் தீர்வாக அமையும்'' என்கிறார் ஆவேசமாக.
''இதுவரை பாகிஸ்தான் உள்பட அசாதாரணச் சூழ்நிலை நிலவும் பல அண்டை
நாடுகளில் எல்லாம் சார்க் மாநாடுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம்
மூன்று கப்பல்களில் ஆயுதங்களும் 3 ஆயிரம் போர் வீரர்களும் பிரதமரின்
பாதுகாப்புக்கு என்று போனதில்லை. இப்போதுதான் இந்த வேடிக்கை நடக்கிறது.
இலங்கையைத் திருப்திப்படுத்தும் வேலையை மட்டுமே செய்து வருகிறது இந்திய அரசு. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த பல லட்சம் இந்தியத் தமிழர்களை ஒன்றுமில்லாத பிச்சைக்காரர்களாகத் திரும்பப் பெற்றது, கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, அதன் பலனாக இன்றும் தமிழக மீனவர்களைப் பலி கொடுப்பது வரை இது தொடர்கிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நாடுகளுடன் இலங்கை
உறவு வைத்துக்கொள்ளாது என்று நினைக்கிறது இந்திய அரசு. ஆனால்,
பாகிஸ்-தான் விமானிகள்தான் சிங்களப் போர் விமானங்களை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவும் தன் ராணுவ தளத்தை இலங்கையில் அமைப்பதற்கு நேரம் பார்த்துவிட்டது. இதெல்லாம் தெரிந்தும் நம் டெல்லி அறிவுஜீவிகள் இப்படி இருக்கிறார்கள்!'' என்று காட்டமாகிறார் பழ.நெடுமாறன்.
இந்தச் சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக் கோப்போடு முன்னெடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. ''பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு.
பிரபாகரன், திறமையான ராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல்
நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம்
தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம்
உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்''- சமீபத்தில் இலங்கை இணையதளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.
சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள்
விஷயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்துகொள்ள தமிழகம் முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது விகடன்.
முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவ வேண்டும் என்பதே அது!
பா.நடேசன்,
அரசியல் துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
''இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?''
''முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசு, தனது ராணுவத்தின்
உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப்
படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்-களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என இலங்கை அரசு எண்ணு-கிறது. அண்மைக் காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!''
''ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்-டத்துக்கு
இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்தநிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?''
''இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின்
போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்த-மானதாகும். எமது விடுதலைப்
போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசாரரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களுடைய ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.'' ''தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று சர்வேயில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையதளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?''
''உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது
விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது
தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகு விரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.''
''இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?''
''விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழு மக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!''
''சர்வதேசச் சமூகம் உங்களையும் இலங்கை அரசையும் எப்படிப் பார்க்கிறது?''
''சர்வதேசச் சமூகம் இலங்கை அரசு பற்றி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. சர்வதேசச் சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும்
இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!''
''இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?''
''இலங்கை அரசின் ராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக்
கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான
சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்றுரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி
வருகின்றனர். சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய யுத்த சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து-கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை விவ-காரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்
மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.''
Prem : Thanks for forwarding the mail.
Vikatan Survery.
Note : I have copy pasted the contents from the mail that I received. The mail didnot have any copy right info. If the above content is protected by copy right (or some other means) please let me know so that I can take necessary action.